டெல்லியில் விவசாயிகள் போராட்டம்: மத்திய வேளாண் மந்திரி நரேந்திரசிங் தோமர் மீது உரிமை பிரச்சினை

263 0

டெல்லியில் விவசாயிகள் போராட்டம் தொடர்பாக, மத்திய வேளாண் மந்திரி நரேந்திரசிங் தோமர் மீது உரிமை மீறல் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.

மத்திய வேளாண் மந்திரி நரேந்திர சிங் தோமருக்கு எதிராக புரட்சிகர சோஷலிஸ்டு கட்சி எம்.பி. என்.கே.பிரேம சந்திரன் நேற்று மக்களவை செயலகத்தில் உரிமை மீறல் நோட்டீஸ் அளித்தார்.

இதுதொடர்பாக பிரேம சந்திரன், சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் அளித்த நோட்டீசில், “ விவசாயிகளுடனான பேச்சுவார்த்தையின்போது, வேளாண் சட்டங்களில் திருத்தம் கொண்டு வருவதாக மத்திய வேளாண் மந்திரி கூறியுள்ளார். ஏற்கனவே அந்த மசோதாக்களில் எதிர்க்கட்சிகள் திருத்தம் கொண்டு வந்தபோது, மக்களவை அதை நிராகரித்து விட்டது. எனவே, மக்களவையால் நிராகரிக்கப்பட்ட திருத்தத்தை கொண்டு வருவதாக சொல்வது, சபையை அவமதிக்கும் செயல்.

மேலும், நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்ட இந்த சட்டங்களை நிபுணர் குழுவின் ஆய்வுக்கு உட்படுத்த சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளது. இவற்றை ஆய்வு செய்ய நாடாளுமன்றத்தை தவிர, வேறு அமைப்புக்கு உரிமை இல்லை. எனவே, இதுவும் சபையை அவமதிக்கும் செயல். ஆகவே, மத்திய வேளாண் மந்திரி மீது உரிமை மீறல் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.