ஊடகவியலாளர் தாக்குதல் – அறிக்கை எதிர்பார்ப்பு

314 0

navy-commander-attack-journalistஹம்பாந்தொட்டையில் ஊடகவியலாளர் ஒருவர் கடற்படைத் தளபதியால் தாக்கப்பட்டமை தொடர்பான அறிக்கையை எதிர்பார்த்திருப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ இதனைத் தெரிவித்துள்ளார்.

கடந்த தினம் ஹம்பாந்தொட்டை துறைமுகத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது செய்தி சேகரிக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த ஊடகவியலாளர் தாக்குதலுக்கு உள்ளானார்.

இது தொடர்பில் பாதுகாப்பு செயலாளரால் அறிக்கை ஒன்று கோரப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையின் அடிப்படையில் அடுத்தக் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கூறியுள்ளார்.