போதைப் பொருட்களுடன் யுவதி ஒருவர் கைது

236 0

ஹங்வெல்ல பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 22 வயதுடைய யுவதி ஒருவர் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண் தங்கியிருந்த வீட்டிலிருந்து 55 கிராம் ஹெரோயின், 35 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 5 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த யுவதி தற்போது வெளிநாட்டில் உள்ள லலியா எனும் போதைப் பொருள் வர்த்தகரின் இடைத்தரகராக செயற்பட்டு வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.