பராமரிப்பு பணிகளுக்காக ஜெயலலிதா நினைவிடம் மூடப்படுவதாக பொதுப்பணித்துறை அறிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் பார்வைக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரான மறைந்த ஜெயலலிதாவுக்கு எம்.ஜி.ஆர். நினைவிடம் அருகில் நினைவிடம் கட்டப்பட்டு கடந்த 27-ந்தேதி திறக்கப்பட்டது. தற்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். அதன்பிறகு பொதுமக்கள் பார்வையிட அனுமதி அளிக்கப்பட்டது.
அன்றைய தினத்தில் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஜெயலலிதா நினைவிடத்தை பார்த்து வந்தனர். இந்த நிலையில், இன்று இரவு 8 மணியளவில் பொதுமக்கள் பார்வையிட தடைவிதிக்கப்படுகிறது என்று பொதுப்பணித்துறை அறிவித்துள்ளது.
பராமரிப்பு பணிகளுக்காக ஜெயலலிதா நினைவிடம் மூடப்படுவதாக பொதுப்பணித்துறை அறிவித்துள்ளது. இதனால் பொதுமக்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.