ஈழத்தமிழ் ஊடகவியலாளர்கள நினைவேந்தல் நிகழ்ச்சியில் இளம் ஊடகவியலாளரக்ளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன

748 0

லண்டனைத் தலைமையகமாகக்கொண்டு இயங்கும் சர்வதேச தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் ஈழத்தில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்களை நினைவுகூரும் முகமாக நிகழ்சியொன்றை சர்வதேச மனிதவுரிமைகள் தினமான டிசம்பர் 10 திகதி ஏற்பாடு செய்திருந்தது. வடமேற்கு லண்டன் பகுதியில் 33 Millfield Road, Burnt Oak என்ற முகவரியில் அமைந்திருக்கும் அமைந்திருக்கும் St.Alphage திருச்சபை மண்டபத்தில் பிற்பகல் இரண்டு மணியிலிருந்து மாலை 5 மணி வரை நடைபெற்ற இந்நிகழ்ச்சியல் ஊடகவியலாளர்களும் பொதுமக்களும் கலந்து கொணடனர்.

dsc_0406

கொல்லப்பட்ட ஊடகவியலாளரகளில் எட்டுபேரினது உருவப்படங்கள் வைக்கப்பட்டு அவர்களுக்கான மலர் வணக்கத்துடன் திருமதி. சுகி கோபி அவர்களது தலைமையில்ஆரம்பான இந்நிகழ்ச்சியில் வரவேற்புரையினை அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் (ஐ.பி.சி) வானொலிப்பிரிவின் இணைப்பாளர் திரு. சதீசன் சத்தியமூர்த்தி வரவேற்புரையினை நிகழ்த்தினார். சதீசன் தனதுரையில் இளம் ஊடகவியலாளர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சனைகளைக் குறிப்பிட்டதுடன் மூத்த ஊடகவியலாளர்களுக்கும் அவர்களுக்குமிடையிலான இடைவெளிபற்றியும் விபரித்தார்.

திருமதி. சுகி கோபி தமது தலைமையுரையில், இவ்வாண்டு காலமான மூத்த ஊடகவியலாளர் திரு. விஜயரத்தினம் வரதராசா அவர்களைப் பற்றி நினைவுக் குறிப்பினையும் வழங்கினார். திரு. வரதராசா அவர்கள் சர்வதேச தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் செயற்குழு உறுப்பினராகவும், ஜெர்மனி நாட்டுக்கான பொறுப்பாளராகவும் பணியாற்றி வந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்த நிகழ்ச்சியில், கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களுடனான தமது தொடர்புபற்றி ஆதவன் தொலைக்காட்சியில் பணியாற்றும் மூத்த ஊடகவியலாளர் திரு. பிரேம் சிவகுரு, ஐ.பி.சி. நிறுவனத்தைச் சேரந்த மூத்த ஒலிபரப்பாளர் திரு. பரா பிரபா, ஆதவன் தொலைக்காட்சியின் இணைப்பாளரும் மூத்த ஊடகவியலாளருமான திரு. இளையதம்பி தயானந்தா, சுயாதீன ஊடகவியலாளரும், கட்டுரையாளருமாக திரு. தியாகராசா திபாகரன், ஊடகவியலாளர் ஒன்றியத்தின் பணிப்பாளர்களில் ஒருவரான ஊடகவியலாளர் திரு. கோபி இரத்தினம் ஆகியோர் உரையாற்றினர். அவர்களது உரைகளில் தமிழ் ஊடகவியலாளர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள், தகவல்களை ஆவணப்படுத்திலில் ஏற்படும் பின்னடைவான நிலை, அரசியல் மற்றும் அதிகாரத் தலையீடுகள் பற்றியும் தமது கருத்துகளை வெளியிட்டனர்.

நிகழ்ச்சியில் இறுதியில், பல்வேறு அழுத்தங்களுக்கு மத்தியில் மக்களுக்கு சரியான தகவல்கள் சென்றடைய வேண்டும் என்ற அவாவுடன் துணிவோடும், அர்ப்பணிப்போடும் தாயகத்திலிருந்து ஊடகப்பணியாறி வரும் ஏழு இளம் ஊடகவியலாளர்களுக்கு, அவர்களை மாண்பேற்றும் வகையில் விருதுகள் வழங்கப்பட்டன. இவ்வாண்டிற்கான சிறப்பு விருதினை அண்மையில் காலமாகிய கருத்தோவியர் திரு. அல்பேர்ட் அஸ்வின் சுதர்சனுக்கு வழங்கப்பட்டது.

விருதகள் பெற்றோர் விபரம்:
1) திரு. சிறிஞானேஸ்வரன் இராமநாதன் (ஆசிரியர், ‘மலை முரசு’ பத்திரிகை, திருகோணமலை)
2) திரு. செல்வராஜா இராஜசேகர் (ஆசிரியர், ‘மாற்றம்’, வெகுசன ஊடகவியலாளர் தளம், கொழும்பு)
3) திரு. கமலநாதன் கம்சனன் (பத்திரிகையாளர்)
4) திரு. ஜெயராஜா துரைராஜா (ஜெரா) (ஆவணப்பட இயக்குனர், கட்டுரையாளர்
5) திரு. உதயராசா சாளின் (சுயாதீன ஊடகவியலாளர்)
6) திரு. ஆறுமுகராசா சபேஸ்வரன் (செய்தியாளர் மற்றும் உதவி ஆசிரியர், யாழ் தினக்குரல்)
7) திரு. விக்னேஸ்வரன் கஜீபன் (காணொலி செய்தியாளர்)

dsc_0369 dsc_0412 dsc_0427

dsc_0436 dsc_0447

dsc_0455

dsc_0358

dsc_0491

dsc_0500

dsc_0504

dsc_0505