பொதுமக்களின் நியாயமான கோரிக்கைகளை முன்வைக்கும் போராட்டங்களை அரசாங்கம் கடந்த அரசாங்கத்தை போலவே ஒடுக்கி வருவதாக மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போது அக்கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் வசந்த சமரசிங்க கருத்து வெளியிட்டார்.
“நாட்டின் பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதியிடம் நாம் கேட்கின்றோம் இதுவா நீங்கள் சொன்ன நல்லாட்சி கடந்த ஆட்சியாளர்களை விரட்டியடித்து மக்கள் இந்த அரசாங்கத்தை கொண்டுவந்தது இதற்காகவா ரத்துபஸ்வலையில் , மீனவர் ஆர்ப்பாட்டத்தில் , கட்டுநாயக்க தொழிலாளர் ஆர்ப்பாட்டத்தில் என கடந்த அரசாங்கம் நடந்துகொண்ட விதத்தை போலவே இந்த அரசாங்கமும் நடந்துகொண்டுள்ளது இதை மக்கள் விடுதலை முன்னணி என்ற தளத்தில் நாம் மிக வன்மையாக கண்டிக்கின்றோம் ” என்று மேலும் தெரிவித்தார்.