யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவனொருவர் புலமைப் பரிசில் பெற்று ஜப்பான் நாட்டிற்குச் சென்றுள்ளார்.
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் தரம் 12இல் உயிரியல் பிரிவில் கல்வி பயிலும் நிமலன் பிருந்தாபன் என்ற மாணவனே இவ்வாறு ஜப்பான் நாட்டிற்கு பயணமாகியுள்ளார்.
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் தரம் 11இல் முதன்மை மாணவனாகிய இவர், கல்விப் பொதுத் தராதர சாதாரண தரத்தில் 2015ஆம் ஆண்டு யாழ் மாவட்டத்தில் முதலிடம் பெற்றவர் ஆவார்.
இதயைடுத்து, ஆசிய நாட்டு இளைஞர்களுக்கான விஞ்ஞான விரிவாக்க செயற்திட்டத்தினூடாக ஜப்பான் அரசின் விஞ்ஞான தொழில்நுட்ப முகவர் நிலையத்தின் அழைப்பின் பேரில் 2016இல் புலiமைப்பரிசில் பெற்று இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் குழுவில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியை சேர்ந்த குறித்த மாணவன் ஜப்பான் பயணமாகியுள்ளார்.