கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் ஏற்பாட்டில், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு “பகவத்கீதை” வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற கட்டிட தொகுதியில் இடம்பெற்ற குறித்த நிகழ்வின்போது, 225 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் “பகவத்கீதை” வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
சர்வதேச கிருஸ்ண பக்தி இயக்கத்தினால், கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணனின் ஏற்பாட்டில், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு “பகவத்கீதை” வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
பகவத் கீதையின் பிரதிகளை இலங்கை சர்வதேச கிருஸ்ண பக்தி இயக்கத்தின் குருஜிகள், கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணனுடன் இணைந்து பிரதமர் ரனில் விக்கரமசிங்கவிற்கும், சபாநாயகர் கரு ஜயசூரியவிற்கும் வழங்கி வைத்தார்.
குறித்த பகவத்கீதைகள் சிங்களம்¸ தமிழ்¸ மற்றும் ஆங்கில மொழிகளில் மொழிபெயர்க்கபட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.