அம்பாந்தோட்டை மாகம்புர மகிந்த ராஜபக்ச துறைமுக ஊழியர்கள் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவேளை, அதனை பதிவு செய்ய சென்ற ஊடகவியலாளர்கள் அங்குள்ள கடற்படை தளபதியினால் தாக்கப்பட்டமையை கண்டித்து ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று அம்பாறை மணிக்கூட்டு கோபுர சந்தியில் இன்று முன்னெடுக்கப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் அம்பாறை மாவட்டத்தினை பிரதிபலிக்கும் பல ஊடக அமைப்புக்கள் கலந்து கொண்டதுடன், கிழக்கு மாகாண தொழில் சார் ஊடகவியலாளர் சங்கம், அம்பாறை மாவட்ட பௌத்த மத துறவிகள், அகில இலங்கை பொது ஊழியர் சங்கம், அகில இலங்கை மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது ஊடகவியலாளர்கள் தலையில் கறுப்பு பட்டியை அணிந்தவாறு,
மகிந்த அரசின் ஊடக அடக்குமுறை போன்று நல்லாட்சியிலும் ஊடக அடக்குமுறையா, அரசே ஊடகம் மீது கைவைக்காதே, கடற்படை தளபதிக்கு பைத்தியமா? என்ற சுலோக அட்டைகளையும் ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.