அமீரகத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் செய்யப்பட்ட ஒரு லட்சத்து 80 ஆயிரத்து 930 டி.பி.ஐ. மற்றும் பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளில், 3,962 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.
அமீரக சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
அமீரகத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் செய்யப்பட்ட ஒரு லட்சத்து 80 ஆயிரத்து 930 டி.பி.ஐ. மற்றும் பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளில், 3 ஆயிரத்து 962 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் அமீரகத்தில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 97 ஆயிரத்து 14 ஆக உயர்ந்துள்ளது.
இதில் நேற்று மட்டும் 2 ஆயிரத்து 975 பேர் குணமடைந்து தங்கள் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 2 லட்சத்து 69 ஆயிரத்து 999 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்பு காரணமாக நேற்று 7 பேர் பலியானார்கள். இதனால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 826 ஆக அதிகரித்தது. தற்போது 26 ஆயிரத்து 189 பேர் கொரோனா தொற்றுக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பொதுமக்கள் முககவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றி சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடித்து கொரோனா பரவலை தடுக்க ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.