அ.தி.மு.க.வில் சசிகலாவையோ, அ.ம.மு.க.வையோ இணைக்க வாய்ப்பில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:
* அதிமுக கட்சியும், ஆட்சியும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
* மனிதாபிமானம் அடிப்படையில்தான் சசிகலாவிடம் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஜெயதீப் நலம் விசாரித்தார்.
* அ.தி.மு.க.வில் சசிகலாவையோ, அ.ம.மு.க.வையோ இணைக்க 100% வாய்ப்பு இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.