இலங்கைக்கும் மலேசியாவுக்கும் இடையில் பல்வேறு துறைகளில் புரிந்துணர்வு – ஒப்பந்தம் விரைவில்

283 0

malaysia_flagஇலங்கைக்கும் மலேசியாவுக்கும் இடையில் பல்வேறு துறைகளில் புரிந்துணர்வு உடன்படிக்கைகள் ஏற்படுத்திக் கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தைத்திபால சிறிசேன இந்த மாதம் 15ஆம் திகதி மலேசியாவுக்கான விஜயத்தை மேற்கொள்வுள்ளார்.

17ஆம் திகதி வரையில் அங்கு தங்கிஇருக்கவுள்ள ஜனாதிபதி, மலேசிய அரசாங்கத்துடன் பல்வேறு உடன்படிக்கைகளை ஏற்படுத்திக் கொள்ளவுள்ளார்.

சுற்றுலாத்துறை, வர்த்தக அபிவிருத்தி உள்ளிட்ட பல உடன்படிக்கைகள் இவ்வாறு மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.