மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்ற வாக்களிப் பினை அரசியலமைப்பில் சேர்க்க வேண்டும் என தேர்தல் கள் ஆணைக்குழு யோசனை முன்வைத்துள்ளது.
இந்நிலையில் நேற்றைய தினம் இடம்பெற்ற தேர் தல் ஆணைக்குழுக் கூட்டத்தில் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற வாக்களிப்பினை அரசியலமைப்பில் சேர்க்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
அதன்படி பிரஜை ஒருவரின் வாக்களிக்கும் உரிமை நேரடியாக அடிப்படை உரிமையாக அரசியலமைப்பில் சேர்க்கப்பட வேண்டும் என யோசனை முன்வைக் கப்பட்டுள்ளது.
தற்போதைய அரசியலமைப்பில் ஜனாதிபதி தேர்தல், பாராளுமன்ற தேர்தல் மற்றும் பொதுசன வாக்கெடுப்பு மாத்திரமே குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி மன்ற தேர்தல் வாக்களிப்பினையும் அதில் சேர்க்க வேண் டும் என தேர்தல்கள் ஆணைக்குழு யோசனை முன்வைத் துள்ளது.
அத்துடன் போட்டியிடும் வேட்பாளரினால் மேற்கொள்ளப் பட்ட செலவு மற்றும் வருமானம் அடங்கிய கோப்பினை தேர்தல் பெறுபேறுகள் வெளியாகி 30 நாட்களுக்குள் தேர்தல் ஆணைக்குழுவில் முன்வைக்கப்பட வேண்டும்.
நிர்ணயிக்கப்பட்ட காலத்துக்குள் உறுப்பினர் வழங்கப்படாவிட்டால் அல்லது தவறான தகவல்கள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தால், உறுப்பினர்களை நீக்கத் தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்ட ஒரு வர் தனது பதவிக் காலத்தின் முதல் 2 ஆண்டுகளில் நோய் அல்லது பிற விசேட சாதாரண காரணங்களைத் தவிரக் குறித்த காலப்பகுதியில் பாராளுமன்ற அமர்வுகளின் எண்ணிக்கையில் குறைந்தபட்சம் 1/3 க்கு கலந்து கொள்ளத் தவறினால், அவர் பதவியிலிருந்து அகற்றப் படுவார்கள் எனத் தேர்தல்கள் ஆணைக்குழு யோசனை முன்வைத்துள்ளது.
பாராளுமன்றத்தில் மாகாண சபைகள் மற்றும் உள்ளூ ராட்சி மன்ற உறுப்பினர் ஒருவர் நீதிமன்றத்தால் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் அவரை பதவியி லிருந்து நீக்கத் தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் வழங்கும் யோசனை நேற்றைய தினம் முன்வைக் கப்பட்டது.