அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள டொனால்ட் ட்ரம்ப் தாய்வான் தொடர்பாக வெளியிட்டுள்ள கருத்துக்கள் குறித்து சீனா தமது கவலையினை வெளியிட்டுள்ளது.
சீனாவின் மாநிலமாக தாய்வான் தீவினை கருதும் நிலையில், டொனால்ட் டிரம்பின் கருத்து பாரிய அளவில் ராஜதந்திர நடவடிக்கைகளை பாதிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாய்வான் தொடர்பான சீனாவின் நிலைப்பாடு குறித்து அமெரிக்கா நன்கு புரிந்து கொள்ள வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 1979 ஆண்டு தாய்வானுடனான ராஜந்திர நடவடிக்கைகளை அமெரிக்கா மீள பெற்றிருந்ததுடன் சீனாவுடனான உறவிற்கு உரிய அங்கீகாரத்தினை வழங்கியிருந்தது.
இந்த நிலையில் அண்மையில் டொனால்ட் ட்ரம்ப் தாய்வானின் ஜனாதிபதியுடன் தொலைபேசியில் உரையாடியப் பின்னர் சர்ச்சை ஏற்பட்டிருந்தது.
எப்படியிருப்பினும், கடந்த 10 வருட காலமாக தாய்வானுடன் உத்தியோகபற்றற்ற முறையில் அமெரிக்கா உறவினை பேணி வருவது குறிப்பிடத்தக்கது.