நாட்டில் சமானத்தை ஏற்படுத்த புதிய சட்டங்கள் தேவை எனில் அவற்றை புதிதாக கொண்டுவர நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாட்டின் வானொலி, தொலைகாட்சி மற்றும் பத்திரிகைகளில் வெளியாகும் செய்திகளை கட்டுப்படுத்த சட்டங்கள் இருக்கின்றன.
ஆனால் இணையத்தளங்களை கட்டுப்படுத்த சட்டங்கள் இல்லை.
சமுக வலைதளங்களின் ஊடாக எவ்வாறான செய்திகளையும் வெளியிட முடியும்.
இதனால் சமுகத்துக்கும் தனி நபர்களுக்கும் பாதிப்புகள் ஏற்படுமாக இருந்தால், அதனை கட்டுப்படுத்துவற்கான சட்டத்திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும்.
ஆனால் இதற்கு காலம் எடுக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.