டெங்கு – நாடு முழுவதும் விசேட வேலைத்திட்டங்கள்

352 0

201509150019527398_in-madhavaram-terminusdengue-fever-awareness_secvpfடெங்கு நுளம்பு பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் விசேட வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

சுகாதார அமைச்சும், தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவும் இணைந்து இதற்கான நடவடிக்கையை எடுத்துள்ளன.

இதன்படி எதிர்வரும் 14ஆம் திகதி, அனைத்து சுகாதார வைத்திய அதிகாரிகளின் பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகளையும் உள்ளடக்கி, நுளம்பு ஒழிப்பு புகைத்தூவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

அத்துடன் குறித்த தினத்தில் நுளம்பு ஒழிப்பு தொடர்பில் அதிகாரிகள் வீடுவீடாக சென்று தெளிவுப்படுத்தல்களையும் மேற்கொள்ளவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.