போதை பொருள் கடத்தலை தடுக்க கூட்டு நடவடிக்கை

331 0

drug_liveday-450x254போதைப் பொருள் கடத்தல்களை தடுப்பதற்கு, இந்திய மற்றும் இலங்கை போதைப் பொருள் தடுப்பு பிரிவுகள் இணைந்து செயற்படவுள்ளன.

கடந்த வெள்ளிக்கிழமை 12 கோடி ரூபாவுக்கும் அதிகமான மதிப்பினைக் கொண்ட கொக்கேய்ன் போதைப்பொருள் தொகுதி ஒன்று கொழும்பு துறைமுகத்தில் மீட்கப்பட்டிருந்தது.

தெற்காசியாவிலேயே மீட்கப்பட்ட பெருந்தொகையான போதைப் பொருள் தொகுதி இதுவாகும்.

குறித்த போதைப் பொருள் இலங்கை ஊடாக இந்தியாவுக்கு கடத்தப்படவிருந்த நிலையிலேயே மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் போதைப்பொருள் கடத்தல்களை தடுக்க இந்திய – இலங்கை போதைப் பொருள் தடுப்பு பிரிவுகள் இணைந்து செயற்பட தீர்மானித்துள்ளன.