ஏமாற்றப்பட்ட மற்றுமொரு பெண்

331 0

woman-cheated-4-youths-260215-400-puthinamசவுதி அரேபியாவுக்கு வீட்டுப் பணிப்பெண்ணாக சென்று, தொழில் தருணரால் வேதனம் வழங்கப்படாமல் ஏமாற்றப்பட்ட பெண் ஒருவர் குறித்த செய்தி, மஸ்கெலியா கிலண்டில் பகுதியில் பதிவாகியுள்ளது.

கணேசன் புஸ்பலீலா என்ற குறித்தப் பெண், கடந்த 2014ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் 20ஆம் திகதி சவுதி ரியாத் நகரில் உள்ள வீடொன்றுக்கு கொழும்பில் உள்ள முகவர் நிறுவனம் ஒன்றின் ஊடாக அனுப்பி வைக்கப்பட்டார்.

அதன்பின்னர் 2 வருடங்களும் 3 மாத காலமும் அவருக்கான வேதனம் எதுவும் வழங்கப்படவில்லை என்பதோடு, அவரை அவரது வீட்டாருடன் தொடர்பு கொள்ளவும் அனுமதிக்கப்படவில்லை.

கடந்த வருடம் அவரது கணவர் இலங்கையில் உயிரிழந்த செய்தியைக் கூட, தொழில் தருணர் குறித்த பெண்ணுக்கு தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

தற்போது அவருக்கு செலுத்தப்பட வேண்டிய பணத்தை ரியாத்தில் உள்ள இலங்கை தூதரகத்தில் செலுத்துவதாக அவரது தொழில் தருணர் உறுதியளித்துள்ள போதும், இன்னும் அது கிடைக்கவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.