வர்தா சூறாவளியின் தாக்கங்கள்

356 0

12rain3வர்தா சூறாவளி அச்சம் காரணமாக இலங்கை – சென்னைக்கு இடையிலான வானூர்தி சேவைகள் தற்காலிகமாக இரத்துச் செய்யப்பட்டுள்ளன.

இதற்கமைய, நாளை காலை 7 மணிவரை சென்னைக்கான அனைத்து வானூர்தி சேவைகளும் இரத்து செய்யப்படுவதாக கட்டுநாயக்க வானூர்தி சேவைகள் முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வர்தா சூறாவளியால் இலங்கை கடற்பகுதிகளில் பாதிப்பு ஏற்படலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக மன்னார் முதல் காங்கேசன்துறை வரையான கடற்பகுதிகளில் கடற்தொழிலில் ஈடுபட வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தினால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் வர்த்த சூறாவளியின் காரணமாக, மேல், வடமேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதேவேளை, வர்தா சூறாவளியின் காரணமாக தமிழ் நாட்டின் சென்னை மாநில இயல்பு நிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

மணிக்கு 120 தொடக்கம் 130 கிலோமீற்றர் வரையான வேகத்தில் இந்த சூறாவளி அங்கு தரை தொட்டுள்ளது.

இதனால் 2 பேர் இதுவரையில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

16 ஆயிரம் பேர் வரையில் இடம்பெயர்ந்துள்ளனர்.

அதேநேரம் சூறாவளியின் காரணமாக கல்பாக்கத்தில் உள்ள அணு உலைகளுக்கு பாதிப்பு ஏற்படலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

எனினும் இது குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.