நைஜீரியாவில் சிறுமிகள் இருவர், இரு குண்டு வெடிப்புகளை நிகழ்த்தியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நைஜீரியாவி போர்னோ மாநிலத்தின் சந்தையில் நிகழ்த்தப்பட்ட இந்த குண்டு வெடிப்புகளில் குறைந்தது ஒருவர் கொல்லப்பட்டதாக நைஜீரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தக் குண்டு வெடிப்பை நிகழ்த்திய சிறுமிகளுக்கு 7 அல்லது 8 வயது இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும், இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எவரும் பொறுப்பேற்கவில்லை என்றும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.