குற்றச்சாட்டை மறுத்தார் டொனால்ட் ட்ரம்ப்

272 0

donald-trumpnஜனாதிபதித் தேர்தலில் தனக்கு ஆதரவாக ரஷ்யா செயற்பட்டதாக சீ.ஐ.ஏ சுமத்தியுள்ள குற்றச்சாட்டை அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப் மறுத்துள்ளார்.

சர்வதேச ஊடகமொன்றிடம் கருத்து வெளியிட்டுள்ளபோதே டொனால்ட் ட்ரம்ப் இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.

அமெரிக்காவில் நடந்த ஜனாதிபதித் தேர்தலில், ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட ஹிலாரி கிளின்டனின் பிரசாரங்கள் தொடர்பான ஈ – மெய்ல்களை பெற்று, டொனால்ட் ட்ரம்புக்கு ரஷ்யா வழங்கியதாக அமெரிக்காவின் மத்திய புலனாய்வு பணியகமான சீ.ஐ.ஏ. குற்றம் சுமத்தியிருந்தது.

இந்த நிலையில், மேற்படி குற்றச்சாட்டை மறுத்துள்ள டொனால்ட் ட்ரம்ப், இது அபத்தமானது என்றும் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

இதேவேளை, இந்தக் குற்றச்சாட்டை ரஷ்யாவும் மறுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறிருப்பினும், இந்தக் குற்றச்சாட்டு குறித்து முழுமையான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா உத்தரவிட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.