உலகின் உயரமான நத்தார் மரம் இலங்கையில் – உருவாக்கும் பணி மீண்டும் ஆரம்பம்

330 0

christmas-tree-in-galle-faceகாலி முகத்திடலில் உருவாக்கப்பட்டு இடைநடுவில் நிறுத்தப்பட்ட உலகின் உயரமான நத்தார் மரத்தின் நிர்மாணப் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்த விடயம் தொடர்பில் பிரதமர் மற்றும் நிதி அமைச்சர் ஆகியோரால் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கு தெளிவுபடுத்தப்பட்டதன் பின்னர் குறித்த நத்தார் மரத்தின் நிர்மாணப் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்படுவதாக கடற்படையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்திருந்தார்.

குறித்த நத்தார் மரத்தின் நிர்மானப் பணிகள் கடந்த ஆகஸ்ட் மாதம் ஆரம்பிக்கப்பட்டது.

இதன் நிர்மாணப் பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுவந்த நிலையில், கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அதற்கு தனது ஆட்சேபனையை தெரிவித்திருந்தார்.

இதனை அடுத்து குறித்த பணிகள் நிறுத்திவைக்கப்பட்டன.

இந்த நிலையில், கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளை அடுத்து அவர் நத்தார் மரத்தின் நிர்மானத்திற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக தெரவிக்கப்படுகின்றது.