இலங்கையின் தேசிய பாதுகாப்பிற்காக சர்வதேசத்தின் ஒத்துழைப்பு அவசியம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
சப்புகஸ்கந்த பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
நாட்டின் பாதுகாப்புக்கு அனைத்து கோணங்களில் இருந்தும் பிரச்சினைகள் ஏற்படலாம்.
அதனை நாம் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.
நாட்டின் பாதுகாப்பை நிலைநாட்ட பாதுகாப்பு துறைகளும் ஏனைய துறைகளும் வலுவான நிலையில் இருக்க வேண்டும்.
அத்துடன், ஒருநாட்டின் பாதுகாப்பு சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பில் தங்கியுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.