மீரிகம கொள்ளை – ஒருவர் கைது

293 0

612337274arrestdமீரிகம, வேவல்தெனிய பகுதியிலுள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவமொன்று தொடர்பில் மீரிகம காவல்துறையினரால் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

உந்துருளியில் வந்த இருவர் இந்த எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் கடந்த புதன்கிழமை அதிகாலை கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.

கைத்துப்பாக்கியை காண்பித்து எரிபொருள் நிரப்பும் நிலைய பணியாளர்களை அச்சுறுத்தியே இவர்கள் கொள்ளையில் ஈடுபட்டுள்ளதாக சீ.சீ.ரீ.வியில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, அங்கிருந்த பணியாளர் ஒருவரிடம் 15 ஆயிரம் ரூபாவை கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.