வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள வர்தா சூறாவளி காரணமாக சென்னை நோக்கிப் பயணித்த இரண்டு வானூர்திகள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.
கட்டுநாயக்க வானூர்தி நிலையத்திலிருந்து சென்னை நோக்கிப் பயணித்த ஸ்ரீலங்கன் வானூர்தி சேவைக்கு சொந்தமான வானூர்தி ஒன்று கட்டுநாயக்க வானூர்தி நிலையத்துக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.
யூ. எல். 121 என்ற வானூர்தியே இவ்வாறு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக வானூர்தி நிலைய பிரதி முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
இந்த வானூர்தி இன்று காலை 9.53 மணியளவில் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, டுபாயிலிருந்து சென்னை நோக்கி பயணித்த எமிரேட்ஸ் வானூர்தி சேவைக்கு சொந்தமான வானூர்தி, கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஈ. கே. 651 என்ற வானூர்யே இன்று காலை 9.34 மணியளவில் இவ்வாறு தரையிறக்கப்பட்டுள்ளதாக கட்டுநாயக்க வானூர்தி நிலைய பிரதி முகாமையாளர் தெரிவித்துள்ளார்.