கொழும்பு, அவிசாவளை பிரதான வீதியில் கொஸ்கம, கடுகொட சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலியானதுடன், மூவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனியார் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகிச் சென்று, அருகிலிருந்த வீடு மற்றும் இரு வர்த்தக நிலையங்களில் மோதியதாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் காயமடைந்த மூவரும் சாலாவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.