இத்தாலி மற்றும் நியூஸிலாந்து ஆகிய நாடுகளுக்கான புதிய பிரதமர்கள் நேற்று நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேற்படி இரு நாடுகளின் பிரதமர்களாக பதவி வகித்தவர்கள் தமது பதவியை கடந்த வாரம் இராஜினாமா செய்துள்ள நிலையிலேயே புதிய பிரதமர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கமைய இத்தாலியின் புதிய பிரதமராக, வெளிவிவகார அமைச்சர் பௌலோ ஜென்டிலோனி (Paolo Gentiloni) நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, நியூஸிலாந்தின் புதிய பிரதமராக துணைப் பிரதமரும், நிதி அமைச்சருமான பில் இங்கிலீஸ் (Bill English) நியமிக்கப்பட்டுள்ளார்.
இத்தாலியின் அரசியல் அமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்தும் நோக்கில் இடம்பெற்ற சர்வஜன வாக்கெடுப்பு தோல்வியடைந்தத்து.
இதையடுத்து, அந்தத் தோல்வியை ஏற்றுக்கொண்ட பிரதமர் மெட்டியோ ரென்ஸி (Matteo Renzi) தனது பதவியை இராஜினாமா செய்தார்.
இந்த நிலையில், புதிய பிரதமராக வெளிவிவகார அமைச்சர் பௌலோ ஜென்டிலோனி நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, தனிப்பட்ட காரணங்களின் அடிப்படையில் நியூஸிலாந்து பிரதமர் ஜோன் கீ (John Key) பதவி விலகியிருந்தார்.
இந்த நிலையில், நியூஸிலாந்தின் புதிய பிரதமராக பில் இங்கிலீஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.