கட்சியை பாதுகாப்பது முக்கியம் – துமிந்த திஸாநாயக்க

263 0

new_dn06-720x480ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பாதுகாப்பதனூடாகவே கட்சி உறுப்பினர்களையும் பாதுகாத்துக் கொள்ள முடியும் என கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

மினுவங்கொடை அத்தனகல்ல பகுதியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க,

கடந்த ஆட்சி காலத்தில் நாட்டில் ஜனநாயக தன்மைகள் மழுங்கடிக்கட்டு அராஜக நிலை ஏற்பட்டிருந்ததாக குற்றம் சுமத்தினார்.

அத்துடன், ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சிக்கென சர்வதேசத்தில் இருந்த கௌரவம், இல்லாமல் செய்யப்பட்டுள்ளதாக சந்திரிகா பண்டார நாயக்க குமாதுங்க தெரிவித்துள்ளார்.