சுவிசில் சிறப்பாக எழுச்சியோடு நடைபெற்ற தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள்!

2448 0

002தாயக விடுதலையை நெஞ்சினில் சுமந்து இறுதிவரை களமாடி தமது இன்னுயிர்களை உவந்தளித்த எமது மண்ணின் அழியாச்சுடர்களான மாவீரர்கள் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 03.07.2016 ஞாயிற்றுக்கிழமை அன்று லுர்சேன் மாநிலத்தில் யுடடஅநனெளுüன மைதானத்தில் மிகவும் சிறப்பாகவும் எழுச்சியாகவும் நடைபெற்றது.

சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் விளையாட்டுத்துறையினால் நடாத்தப்பட்ட இப் போட்டிகளானது பொதுச்சுடரேற்றலுடன், சுவிஸ் மற்றும் தமிழீழத் தேசியக்கொடிகளும் ஏற்றி வைக்கப்பட்டதனைத் தொடர்ந்து ஈகைச்சுடர், அகவணக்கம், மலர்வணக்கத்துடன் போட்டிகள் ஆரம்பமாகியது.

தமிழ்த் தேசியத்திற்கு வலுச்சேர்க்கவும்இ தாயகம் நோக்கிய தேடலுடன் இளையோர்களை வழிப்படுத்தவும், மாவீரர்களின் தியாக நினைவுகள் ஊடாக தாயக உணர்வோடு அவர்களை ஒருமைப்படுத்தும் நோக்கிலும் ஒழுங்கமைக்கப்பட்ட மாவீரர் நினைவு சுமந்த இவ் விளையாட்டுகளில் நூற்றுக்கணக்கான போட்டியாளர்களோடு திரளான தமிழின உணர்வாளர்களும்இ விளையாட்டு ஆர்வலர்களும் தாயக நினைவுகளை சுமந்தபடி ஆர்வத்துடன் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வளர்ந்தோர் உதைபந்தாட்டம், இளையோர் உதைபந்தாட்டம், கரப்பந்தாட்டம், துடுப்பாட்டம் போன்ற பல பிரிவுகளில் அனைத்து விதமான போட்டிகளும்; ஒருங்கே ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்றதுடன் 25வது வருடமாக நாடத்தப்பட்ட வளர்ந்தோர் உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டியின் சிறப்புமிக்க பரபரப்பான இறுதியாட்டத்தில் சுக் தாய்மண் விளையாட்டுக் கழகத்தினரை எதிர்த்தாடிய யங்ஸ்ரார் விளையாட்டுக் கழகமானது 1:2 என்ற கோல்க்கணக்கில் வெற்றியீட்டி சுற்றுக்கிண்ணத்ததை தனதாக்கி கொண்டது.

25வது வருட நிறைவை முன்னிட்டு இதுவரை காலமும் சாதனைகள் நிகழ்த்திய அனைத்து உதைபந்தாட்டக் கழகங்களுக்கும் சிறப்பளித்து கேடயங்கள் வழங்கி மதிப்பளிக்கப்பட்டதுடன்இ 25வது மாவீரர்கள் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற கழகங்களைச் சேர்ந்த வீரர்களுக்கான பதக்கங்களும், கேடயங்களும் வழங்கி மதிப்பளிக்கப்பட்டதனைத் தொடர்ந்து சுவிஸ் மற்றும் தமிழீழத் தேசியக்கொடிகள் இறக்கப்பட்டு தாரக மந்திரத்துடன் போட்டிகள் அனைத்தும் சிறப்பாக நிறைவடைந்தன.

022

இவ் விளையாட்டுப் போட்டிகள் சிறப்பாக நடைபெற அனைத்து வகைகளிலும் முழு ஒத்துழைப்பு நல்கிய அனைத்துக் கழகங்கள், கழக வீரர்கள், கழகப் பொறுப்பாளர்கள், ஆதரவாளர்கள், சக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட அனைத்து எமது உறவுகளுக்கும் பாராட்டுதல்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு

தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த உதைபந்தாட்ட, கரப்பந்தாட்ட
துடுப்பாட்டச் சுற்றுபோட்டிகளின் முடிவுகள் 03.07.2016

012

09 வயதுப்பிரிவு

1ம் இடம் தமிழ் ஸ்போர்ட்டிங் விளையாட்டுக் கழகம்
2ம் இடம் வானவில் விளையாட்டுக்கழகம்;
3ம் இடம் நீலப்பபறவைகள் விளையாட்டுக் கழகம்

11 வயதுப்பிரிவு

006

1ம் இடம் நீலப்பபறவைகள் விளையாட்டுக் கழகம்
2ம் இடம் வானவில் விளையாட்டுக்கழகம்
3ம் இடம் இளம் சிறுத்தைகள் விளையாட்டுக் கழகம்

13 வயதுப்பிரிவு

016

1ம் இடம் ஓஸ்கா விளையாட்டுக்கழகம்
2ம் இடம் சிற்ரி போய்ஸ் விளையாட்டுக் கழகம்
3ம் இடம் இளம் சிறுத்தைகள் விளையாட்டுக் கழகம்

15 வயதுப்பிரிவு

018

1ம் இடம் தமிழ் யுத் விளையாட்டுக் கழகம்
2ம் இடம் ஒஸ்கா விளையாட்டுக் கழகம்
3ம் இடம் வானவில் விளையாட்டுக்கழகம்
17 வயதுப்பிரிவு

010

1ம் இடம் ஒஸ்கா விளையாட்டுக் கழகம்
2ம் இடம் யங்பேட்ஸ் விளையாட்டுக்கழகம்
3ம் இடம் நீலப்பபறவைகள் விளையாட்டுக் கழகம்

வளர்ந்தோர்பிரிவு

014

1ம் இடம் யங்ஸ்ரார் விளையாட்டுக் கழகம்
2ம் இடம் தாய்மண் விளையாட்டுக் கழகம்
3ம் இடம் நடேஸ்வரா விளையாட்டுக் கழகம்.

கரப்பந்தாட்டம் ஆண்கள் (5 பேர்)

008

1ம் இடம் சூரிக் விளையாட்டுக் கழகம்
2ம் இடம் nஐhலிபோஸ் விளையாட்டுக் கழகம்

மென்பந்து துடுப்பாட்டம்

019

1ம் இடம் அல்ப்ஸ் ஒ1 விளையாட்டுக் கழகம்
2ம் இடம் இளம் புலிகள் விளையாட்டுக் கழகம்
3ம் இடம் nஐhலிஸ்ரார் விளையாட்டுக் கழகம்.
001

 

003

004

005

006

007

008

009

010

011

012

013

014

015

016

017

018

019

020

021

022

023

024

025

026

027

Leave a comment