இஸ்தாம்புல் தாக்குதல் – இலங்கை ஜனாதிபதி கண்டனம்

332 0

%e0%ae%ae%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bfஇஸ்தான்புல், கெய்ரோ, மைடுகூறி, மொகாடிஸு ஆகிய நகரங்களில் நேற்றைய தினம் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல்களுக்கு இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.

தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் வலை தளத்தினூடாக ஜனாதிபதி இந்தக் கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.

குறித்த நகரங்கள் இந்தத் தாக்குதல்களினால் ஏற்பட்ட பாதிப்புக்களிலிருந்து மீட்சிபெற தாம் பிரார்த்திப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று இடம்பெற்ற இந்த தீவிரவாத தாக்குதல்களினால் 48க்கும் மேற்பட்டோர் பலியானதாகவும், 400 இற்கும் மேற்பட்ட பொது மக்கள் காயமடைந்தனர்.