நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு பாதிப்பேற்படாதவாறு நாடு முகங்கொடுத்துள்ள சவால்களை வெற்றிகொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
தற்போது பல நாடுகளில் லட்சக்கணக்கான இலங்கையர்கள் அகதிகளாக வாழகின்றனர்.
இதேவேளை, வடக்கிலுள்ள அகதி முகாம்களிலும் ஆயிரக்கணக்கானோர் அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர்.
அந்த மக்கள் மீண்டும் ஆயுதம் எந்தாதவாறு அனைவருக்குமான சமூக நியாயத்தை நிறைவேற்ற வேண்டுமென இதன்போது ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
நீண்ட காலமாக இடம்பெற்ற அபிவிருத்தி ஏற்றத்தாழ்வுகள் காரணமாக வடக்கு, கிழக்கு மக்கள் அதிகமாக பாதிக்கப்பட்டனர்.
நாட்டிலுள்ள ஒன்பது மாகாணங்களுக்கும், 25 மாவட்டங்களுக்கும் அபிவிருத்தி பயன்களை நியாயமாக வழங்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என்று ஜனாதிபதி கூறியுள்ளார்.