தமிழக மீனவர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தை சுட்டிக்காட்டி தமிழகத்தின் புதிய முதலமைச்சர் ஒ பன்னீர்ச்செல்வம் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழக முதல்வர் தமது கடிதத்தில் கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், தமிழக மீனவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்பட வேண்டும் என ஓ பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.