வடக்கில் மேலும் 18 பேருக்கு கொரோனா! பணிப்பாளர் கேதீஸ்வரன்

291 0

வடக்கு மாகாணத்தில் மேலும் 18 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை இன்று கண்டறியப்பட்டுள்ளது.

3 பொலிஸார் உட்பட 15 பேர் மன்னார் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் கண்டறியப்பட்டுள்ளனர் என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

இது குறித்து கருத்து வெளியிட்ட அவர், யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் 319 பேரின் மாதிரிகளும், யாழ். போதனா வைத்தியசாலையில் 360 பேரின் மதிரிகளும் இன்று பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

அவர்களில் 18 பேருக்கு தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இதன்படி மன்னாரில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் நேரடித் தொடர்புடையவர்கள் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களில் 12 பேருக்கு தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இதேவேளை மன்னாரில் பணியாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மூவரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன் வவுனியா தொற்றாளர்களுடன் தொடர்புடைய ஒருவருக்கும் தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் யாழ். மாவட்டத்துக்கு வருகை தந்தவர்களிடம் எழுதுமட்டுவாழில் வைத்து மாதிரிகள் பெறப்பட்டிருந்தன.

அவ்வாறு மாதிரிகள் பெறப்பட்டவர்களில் இருவருக்கு தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அவர்களில் ஒருவர் சுதுமலையைச் சேர்ந்தவர். மற்றையவர் கண்டியைச் சேர்ந்தவர்” என அவர் கூறினார்.