சுதந்திரதினத்தை கரிநாளாக பிரகடனப்படுத் தி வடக்குகிழக்கு முழுவதும் போராட்டங்களை முன்னெடுக்க திட்டம்-

214 0

சுதந்திரதினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தி வடக்குகிழக்கு முழுவதும் போராட்டங்களை முன்னெடுக்கப்போவதாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள்; சங்கம் அறிவித்துள்ளது.

அறிக்கையொன்றில் இதனை தெரிவித்துள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளதாவது

இலங்கையை விசாரிப்பதற்கு ஐநாமனித உரிமை பேரவையும் ஐநாவின் உறுப்புநாடுகளும் ஐக்கியநாடுகள் பாதுகாப்பு சபைக்கு பரிந்துரை செய்யவேண்டும் என்பதை வலியுறுத்தியும் பெப்ரவரி நான்காம் திகதியை கரிநாளாக பிரகடனப்படுத்தி வடக்குகிழக்கு தழுவிய மக்கள் எழுச்சி பேரணியை நடத்துவதற்கு எங்கள் அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது.

பெப்ரவரி நான்காம் திகதி வடமாகாணத்தில் கிளிநொச்சியில் காலை 8.30 மணிக்கு கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் பேரணி ஆரம்பமாகும்,கிழக்கு மாகாணத்தில் அதேநேரத்தில் மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் ஆரம்பமாகும்.

பொறுப்புக்கூறலும் நீதிகிடைப்பதும் முழுமையான சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஊடாகவே சாத்தியமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.