வார்தா புயல் எதிரொலி: தேவையான உணவு பொருட்கள் இருப்பு வைக்கவும்- தமிழக அரசு

325 0

201612120239395355_wardha-storm-echo-food-products-stock-government_secvpfவார்தா புயல் நேரத்தில் பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து தமிழக அரசின் வருவாய் துறை 15 அறிவுரைகளை வழங்கியுள்ளது.

சென்னை மற்றும் அருகில் உள்ள மாவட்டங்களை ‘வார்தா’ புயல் இன்று தாக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், புயல் நேரத்தில் பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து தமிழக அரசின் வருவாய் துறை 15 அறிவுரைகளை வழங்கியுள்ளது. அதன் விவரம் வருமாறு:–

* ரேடியோ மற்றும் தொலைக்காட்சியினை தொடர்ந்து கவனித்து காலநிலை அறிவிப்புகளை அறிந்து கொள்ளலாம். இச்செய்தியை பிறருக்கு தெரிவிக்கலாம்.

* ரேடியோ மற்றும் தொலைக்காட்சியில் அதிகாரப்பூர்வமான செய்தியை மட்டுமே பிறருக்கு தெரிவிக்க வேண்டும்.

* புயல் காற்று கதவு மற்றும் ஜன்னல்களை சேதப்படுத்த வாய்ப்புள்ளதால் அவற்றை இறுக்கமாக மூடிவைக்க வேண்டும்.

* கடற்கரை மற்றும் நீர் சூழ வாய்ப்புள்ள பகுதிகளில் இருந்தால் மேடான பகுதிக்கு விரைவாக வெளியேறவும், நீர் சூழ்வதற்கு முன்னரே பாதுகாப்பான பகுதிகளுக்கு சென்றுவிட வேண்டும்.

* தங்கள் குடியிருப்பு வெள்ளம் மற்றும் புயலால் பாதிக்கப்படாது எனில் வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்க வேண்டும். அதிகாரப்பூர்வமாக கேட்டுக்கொள்ளப்பட்டால் உடனே வெளியேறவும்.

* நீர் நிலைகள் மற்றும் ஆற்று கரைகளில் உள்ள குடியிருப்புகளுக்குள் கனமழை காரணமாக நீர் சூழ வாய்ப்புள்ளதால் கரையோரங்களில் குடியிருப்போர் கவனமாக இருக்க வேண்டும்.

* சமைக்காமல் உண்ணக்கூடிய பிரட், பிஸ்கெட், பழங்கள் உள்ளிட்ட உணவுகள் தேவையான அளவு இருப்பு வைக்கவும், போதுமான குடிநீர், பாதுகாப்பான பாத்திரங்கள் சேமித்து வைக்கவும்.