2019 ஆம் ஆண்டின் டிசம்பர் மாதத்தில் நிலவிய உயர் தளத்தின் புள்ளி விபரவியல் தாக்கம் காரணமாக, தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணை அடிப்படையாக கொண்ட பணவீக்கம் ஆண்டிற்கு ஆண்டு நவம்பர் மாதத்தில் 5.2 சதவீதத்திலிருந்து, கடந்த டிசம்பர் மாதம் 4.6 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, உணவு பணவீக்கம் மற்றும் உணவல்லாப் பணவீக்கம் என்பன முறையே கடந்த டிசம்பர் மாதத்தில் 7.5, 2.2 சதவீதமாக காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது