ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பாக ஸ்கைப் மூலம் சாட்சியம் வழங்கினார் ஷானி !

208 0

2019 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஈஸ்டர் தாக்குதல்களை விசாரிக்க நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர சாட்சியம் வழங்கியுள்ளார்.

ஸ்கைப் தொழில்நுட்பத்தின் உதவியுடன் தாக்குதல்கள் குறித்து நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் இன்று (திங்கட்கிழமை) அவர் சாட்சிம் வழங்கியுள்ளார்.

2013 இல் பிரதி பொலிஸ் மா அதிபராக செயற்பட்ட வாஸ் குணவர்தன உள்ளிட்டோருக்கு எதிராக முன்வைக்கப்பட்டிருந்த துப்பாக்கிகள் தொடர்பான முறைப்பாடுகள் தொடர்பாக உண்மைக்குப் புறம்பான விடயங்களை தெரிவித்த குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அந்தவகையில் மஹர சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்ட அவருக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.

குறித்த வழக்கில் ஷானி அபேசேகர எதிர்வரும் பெப்ரவரி 03 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.