அதிர்ஷ்ட இலாபச் சீட்டு விற்பனை செய்த நபரொருவருக்கு கொரோனா

220 0

வெலிமட நகரில் பழைய தபால் அலுவலக வீதி ஆரம்பிக்கும் இடத்தில் அதிர்ஷ்ட இலாபச் சீட்டு விற்பனை செய்த நபரொருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

நோய் அறிகுறிகள் தென்பட்டதால், சுகாதாரத் துறையினருக்கு அவர் அறிவித்ததன் பிரகாரம், அவருக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பரிசோதனை முடிவுக்கமைய அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து, கடந்த 18 ஆம் திகதிக்குப் பின்னர், அவரிடம் அதிர்ஷ்ட இலாபச் சீட்டுகளை கொள்வனவு செய்தவர்கள், உடனடியாக வெலிமட பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களுக்கு அறிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.