எகிப்து நாட்டின் தலைநகரான கெய்ரோவில் உள்ள மிகப்பழமை வாய்ந்த கிறிஸ்தவ தலைமை தேவாலயம் அருகே இன்று நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 22 பேர் உயிரிழந்தனர்.
பண்டைக்காலத்தில் எகிப்து நகரின் தலைநகராக விளங்கிய அல்க்ஸான்ட்ராவில் கிறிஸ்துவுக்கு பின்னர் முதலாம் நூற்றாண்டில் அப்போஸ்தலர்களில் ஒருவரான மாற்கு உருவாக்கிய பழமையான தேவாலயம் ஒன்று அமைந்துள்ளது.
எகிப்து நாட்டின் கிறிஸ்தவ மதத்தினருக்கான தலைமை மதகுரு வாழும் இந்த தேவாலயம் மாற்கு தேவாலயம் என்றும் அழைக்கப்படுகிறது. தற்போதைய கெய்ரோ நகரின் அப்பாஸியா பகுதியில் அமைந்துள்ள இந்த தேவாலயத்தின் அருகே இன்று வெடிகுண்டு வெடித்த சம்பவத்தில் 22-க்கும் அதிகமானோர் உயிரிழந்ததாகவும், பலர் படுகாயம் அடைந்ததாகவும் முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
நேற்று முன்தினம் இதே கெய்ரோ நகரில் நிகழ்ந்த இரு குண்டுவெடிப்பு சம்பவங்களில் ஆறு போலீசார் பலியானது நினைவிருக்கலாம்.