அரசியல் சாசனம் தொடர்பில் ஆளும் கட்சிக்குள் முரண்பாட்டு நிலைமை

268 0

47c629a4f6076e499d018d8ee19bbf41_lஅரசியல் சாசனம் தொடர்பில் ஆளும் கட்சிக்குள் முரண்பாட்டு நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெற்கு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. புதிய அரசியல் சாசனத்தின் ஊடாக அதிகாரங்களை பகிர்வது தொடர்பிலும் சர்வஜன வாக்கெடுப்பு நடத்துவது தொடர்பிலும் இவ்வாறு முரண்பாட்டு நிலைமை ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

விரிவான அடிப்படையில் அதிகாரங்களை பகிர்ந்தளித்து முழு அளவில் அரசியல் சாசனம் புதிதாக உருவாக்கப்பட வேண்டுமென கோரியுள்ள ஐக்கிய தேசியக் கட்சி சர்வஜன வாக்கெடுப்பு நடத்தி வெற்றியீட்டக்கூடிய இயலுமை அரசாங்கத்திற்கு உண்டு என சுட்டிக்காட்டியுள்ளது.

எனினும், சர்வஜன வாக்கெடுப்பு நடத்தாது அரசியல் சாசனத்தில் திருத்தங்களைச் செய்யவே மக்கள் ஆணை வழங்கியுள்ளதாக சுதந்திரக் கட்சியின் ஒரு தரப்பினர் தெரிவித்துள்ளனர். இதனால் புதிய அரசியல் சாசனம் அமைப்பது தொடர்பில்  முரண்பாட்டு நிலைமை ஏற்பட்டுள்ளதாக அரசாங்க உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.