வடக்கு மாகாணசபைக்குத் தனித் தேசியகீதம் இல்லை!

309 0

c-v-k-sivagnanamவடக்கு மாகாணசபைக்கு தனித் தேசிய கீதம் இயற்றப்படுவதாக சிங்கள நாளிதழான திவயின நேற்று முன்தினம் வெளியிட்டிருந்த செய்தியை வடக்கு மாகாணசபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் மறுத்துள்ளார்.

இதுபற்றி அவர் தெரிவிக்கையில், இந்தச் செய்தி மிகவும் தவறானதெனவும், இது தவறான நோக்கத்தில் வெளியிடப்பட்ட செய்தியெனவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், அனைத்து மாகாண சபைகளுக்கும் தனிப்பட்ட ரீதியில் மாகாணசபைக் கீதங்கள் உண்டு. அதேபோல் வடக்கு மாகாணசபையும் வடக்கு மாகாணசபைக்கு தனிப்பட்ட மாகாணசபைக் கீதத்தை உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.