கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் புதிய கட்டடம் எதிர்வரும் 23ஆம் திகதி திறக்கப்படவுள்ளது.
1974ஆம் ஆண்டு கச்சத்தீவு இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர், ஒப்பந்தத்தின் பிரகாரம், அந்தோனியார் ஆலயத் திருவிழாவில் கலந்துகொள்வதற்கு இந்திய பிரஜைகளுக்கும் அனுமதியளிக்கப்பட்டது.
உள்நாட்டு யுத்தம் காரணமாக பாதுகாப்பு கருதி நிறுத்தப்பட்டிருந்த கச்சத்தீவு அந்தோனியார் தேவாலய திருவிழா, 2010ஆம் ஆண்டு முதல் மீண்டும் நடைபெற்று வருகின்றது.
இந்த நிலையில், தீவில் புதிய ஆலயம் நிர்மாணிக்கப்பட்டு, கடந்த 7ஆம் திகதி அதன் திறப்பு விழா நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
எனினும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவையொட்டி திகதி குறிப்பிடாமல் திறப்பு விழா ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையிலேயே ஆலயத்தின் புதிய கட்டட திறப்பு விழா எதிர்வரும் 23ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.