தஜிகிஸ்தான் இஸ்லாமிய குடியரசின் ஜனாதிபதி எமோமாலி ரஹ்மான் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்கிறார்.
3 நாள் உத்தியோகப்பூர்வ விஜயமாக அவர் இன்று இலங்கை செல்கிறார்.
இந்த விஜயத்தின் போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் சபாநாயகர் கருஜயசூரிய ஆகியோரை அவர் சந்திக்கவுள்ளார்.
இதேவேளை, அவர் கண்டிக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது