வவுனியா பொது வைத்தியசாலையில் காவல்துறையினரால் அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவர் வைத்தியசாலை காவலில் இருந்து தப்பிச் சென்றுள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் வீதியை மறித்து போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தியதுடன் காவல்துறையின் விசாரணைகளுக்கு ஒத்துழைக்க மறுத்த பெண்ணை காவல்துறையினர் வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
குறித்த பெண்ணுக்கு மருத்துவ அறிக்கையினைப் பெறுவதற்கு ஆலோசனை வழங்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில், வைத்தியசாலையில் உள்ள காவலில் இருந்த இந்த பெண் எவ்வாறு தப்பிச் சென்றார் என்பது தொடர்பாக காவல்துறையினர் தற்போது விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.