சென்னை முழுதும் திடீர் மாற்றம் – என்ன காரணம்?

278 0

185131ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவின் பொதுசெயலாளராக சசிகலா பதவியேற்று கொள்ள வேண்டும் என அமைச்சர்கள், கழக நிர்வாகிகள் உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அடிமட்ட தொண்டர்கள் மத்தியில் இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தாலும் ஓ.பன்னீர் செல்வம், மூத்த அமைச்சர்கள், தம்பிதுரை உள்ளிட்டோர் சசிகலாதான் கழகத்தையும் மக்களையும் காக்க வேண்டியவர் என பேட்டியளித்து வருகின்றனர்.

தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா, கடந்த 5ஆம் திகதி உடல்நலக் குறைவால், அப்போலோ மருத்துவமனையில் காலமானார்.

அப்போதே, கட்சியின் முக்கிய நிர்வாகிகளிடம் பொது செயலாளர் பதவி, கட்சியில் அங்கீகாரம் போன்றவற்றை மையப்படுத்தி சில பேப்பரில் கையெழுத்து வாங்கியதாக தகவல்கள் வெளியாகின.

கடந்த 28 ஆண்டுகளாக, அதிமுகவின் பொது செயலாளராக இருந்தவர் செல்வி ஜெயலலிதா.

எந்தவித போட்டியோ, சிக்கலோ இல்லாமல், ஒரு மனதாக 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை, பொது செயலாளராக தேர்ந்தெடுக்கப்படுவார் ஜெயலலிதா.

அதே போல், சசிகலாவும் போட்டியின்றி தேர்வாவதையே விரும்புகிறார் என்கின்றனர் அதிமுக வட்டாரங்கள்.

அதற்கேற்றாற் போல், காய்களை நகர்த்தி வருகிறார்கள் மன்னார்குடி குடும்பத்தினர்.

இந்தநிலையில் சென்னையில் சசிகலாவுக்கு ஆதரவாக போஸ்டர்களும் பேனர்களும் வைக்கப்பட்டுள்ளன.

இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக ஆ.தி.மு.கழகத்தின் பொது செயலாளராக தலைமை ஏற்க தலைமகளே வாரீர் வாரீர் என மிகபெரிய பேனர் ஒன்று வைக்கப்பட்டுள்ளது சென்னையில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

185133 185131 185132