ஜெயாவின் வெற்றிடத்தை நிறப்ப அரசியலுக்கு வர தயார் – தீபா

286 0

deepa_jayakumarசசிகலாவையோ அவரது உறவினர் ஒருவரையோ வாரிசாக ஒரு போதும் எனது அத்தை ஜெயலலிதா ஏற்று கொண்டதில்லை என்று, ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயக்குமார் மகள் தீபா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இன்றைய சூழ்நிலையில் தான் அரசியலுக்கு வரும் வாய்ப்பு ஏற்பட்டால் அது தவறாக இருக்காது என்றே கருதுகிறேன்.

இந்த விடயத்தை பொறுத்த வரை ஜனநாயக ரீதியாக மக்கள் முன் விடுகிறேன். அவர்கள் முடிவு சொல்லட்டும்.

மக்களின் முடிவை கட்சி ஏற்க வேண்டும். மக்களின் மனநிலைக்கு ஏற்றால்போல் கட்சி எதிர்காலத்தை வகுத்து கொள்ள வேண்டும்.

சசிகலாவையோ அவரது உறவினர் ஒருவரையோ வாரிசாக ஒரு போதும் எனது அத்தை ஜெயலலிதா ஏற்று கொண்டதில்லை.

அவர்களை அரசியலுக்கு அப்பால்தான் நிறுத்தி வைத்திருந்தார் எனவும் தீபா குறிப்பிட்டுள்ளார்.