இலங்கையில் சட்டவிரோத மதுபான உற்பத்தி அதிகரிப்பு

317 0

20137kuwait-3இலங்கையில் மதுபானங்களின் விலைகள் உயர்த்தப்பட்டதனைத் தொடர்ந்து சட்டவிரோத உற்பத்தி அதிகரித்துள்ளதாக கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல் மாகாணத்தில் மாத்திரம் 30 பாரியளவிலான சட்டவிரோத கசிப்பு மதுபான உற்பத்திச்சாலைகள் கடந்த இரண்டு வாரங்களில் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தினால் மதுபானங்களின் விலைகள் உயர்த்தப்பட்டதனைத் தொடர்ந்து சட்டவிரோத மதுபான வகைகளுக்கு பாரிய கிராக்கி நிலவி வருகின்றது.

பாரியளவில் சட்டவிரோத மதுபான வகைகளை கொழும்பிற்கு அனுப்பி வைக்கும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில், சட்டவிரோத மதுபான உற்பத்தி மற்றும் விநியோகத்தை தடுக்க கலால் திணைக்களம் விசேட நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.