ஜெயலலிதா சிம்மராசி. மக நட்சத்திரத்தில் பிறந்தவர். ஓ. பன்னீர் செல்வம் ரேவதி நட்சத்திரம், மீன ராசி. சசிகலாவும் ரேவதி நட்சத்திரம், மீனராசி.
இந்த கணிப்பின்படி, ஜெயலலிதாவிற்கு வாழ்நாள் முழுவதும் ஓ.பன்னீர் செல்வமும், சசிகலாவும் விசுவாசமாக இருப்பார்களாம்.
நம்பிக்கையுடன் இருப்பார்களாம்.
இந்த ஜோதிட கணிப்புகளை நம்பித்தான் ஜெயலலிதா அவர்கள் இருவரையும் தனக்கு நெருக்கமாக வைத்திருந்தாராம்.
அதேநேரம் ஒரே ராசி மற்றும் ஒரே நட்சத்திரம் கொண்ட ஓ.பன்னீர் செல்வமும், சசிகலாவும் ஒத்த கருத்துடன் செயல்பட மாட்டார்களாம்.
ஒத்துவராதாம். சண்டை வருமாம். ஜோதிட கணிப்பு இப்படி உள்ளதாக இந்திய நாளிதழ்கள் சில செய்தி வெளியிடப்பட்டிருக்கிறன.