சீன அதிகாரிகளுக்கும் அலிபாபா நிறுவனத்திற்கும் இடையே எழுந்த மோதல் காரணமாக சீன கோடீஸ்வரர் ஜாக் மா கடந்த சில மாதங்களாக மாயமாகி இருந்தார்.
சீனாவை சேர்ந்த முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனம் அலிபாபா. இந்த நிறுவனத்தின் தலைவராக செயல்பாட்டுவருபவர் ஜாக் மா. 420 பில்லியன் டாலர் மதிப்புடைய நிறுவனமான அலிபாபா சீனாவின் இ-காமர்ஸ் மற்றும் டிஜிட்டல் பணபரிவர்த்தனை சந்தையை முழுவதும் தனதாக்கிக்கொண்டுள்ளது.
இதன் மூலம் ஜாக் மா சீனாவின் முதல் பெரிய பணக்காரராக உயர்ந்தார். தற்போது அலிபாபா தனது சேவையை உலகின் பல்வேறு நாடுகளிலும், பல்வேறு தொழில்களிலும் விரிவுபடுத்தியுள்ளது.
இதற்கிடையில் சமீபகாலமாக அலிபாபா நிறுவனத்திற்கும் சீன அரசு அதிகாரிக்களுக்கும் இடையே வர்த்தக ரீதியிலான மோதல் ஏற்பட்டது. சீன அரசின் செயல்பாடுகள் தனது நிறுவன வளர்ச்சியை தடுப்பாதாக ஜாக் மா குற்றம்சுமத்தினார்.
பொதுவெளியில் காணொலி காட்சி மூலம் ஜாக் மா தோன்றியபோதும் அவர் இன்னும் சீன அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் தான் உள்ளாரா? என்ற தகவல் வெளியாகியகவில்லை.
எது எப்படியாயினும் 3 மாதங்களுக்கு மேலாக மாயமாகி இருந்த ஜாக் மா மீண்டும் தோன்றியுள்ளது அவரது நிறுவன ஊழியர்களுக்கும், அவரது நிலைமை என்ன? என்பது கவலையில் இருந்த மக்களுக்கும் சற்று நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.