சர்வதேச மனிதவுரிமை நாளை முன்னிட்டு யேர்மன் தலைநகரத்தில் நடைபெற்ற உலக சமாதானத்துக்கான மக்கள் ஒன்று கூடலில் நூற்றுக்கணக்கான பல்லின மக்கள் கலந்துகொண்டனர். இவ் ஒன்றுகூடலில் இன்றைய நாட்களில் சிரியா மக்கள் எதிர்கொள்ளும் அவலநிலையை முதன்மையாக கொண்டு சர்வமத பிரதிநிதிகள் தமது உரைகளை நிகழ்த்தினார்கள்.அத்தோடு உலக சமாதானத்தை வேண்டி ஒன்றுகூடலில் கலந்துகொண்ட மக்கள் சுடர்வணக்கம் செலுத்தினார்கள்.
தமிழின அழிப்பை எடுத்துரைக்கும் வகையில் யேர்மன் ஈழத்தமிழர் மக்கள் அவை மற்றும் யேர்மன் தமிழ் இளையோர் அமைப்பு சார்பாக அதன் பேர்லின் மாநிலத்துக்கான ஒருங்கிணைப்பாளர்கள் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.